விஸ்வாமித்திரர் கொடுத்த காயத்ரி மந்திரம் உலக மக்கள் அனைவரும் தீட்சை கொடுக்கவேண்டி அடியேனுக்கு இறைவன் கொடுத்த பணி
பிரம்மரிஷிக்கெல்லாம் ரிஷி தலைமை ரிஷியாகப் போற்றப்படுபவர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரர். கௌசிகன் எனும் மன்னனாகப் பிறந்து, சத்ரியனாக வாழ்ந்து, கடுமையான தவத்தால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர். மக்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வசிஷ்டரிடம் சவால் விட்டு, அதை வென்று காட்டியவர். இந்திரன் அனுப்பிய தடைகளையும் சோதனைகளையும் கடந்து தவத்தில் உறுதியாக நின்றவர். தர்மதேவனின் சோதனையில் சிறிதும் சுயநலமற்ற இறக்கத்தின் பெருக்குநீர் ஆக திகழ்ந்தவர் ஆதலால் "விஸ்வாமித்திரர்" "விஸ்வம்" என்றால் உலகம், "மித்திரன்" என்றால் நண்பன்; உலக நண்பன் என்று தர்மதேவனால் அழைக்கப்பட்டவர் என்ற பெயரைப் பெற்றார். திரிசங்குவிற்காக தனி சொர்க்கத்தையே படைத்தவர். அரிச்சந்திரனின் புகழ் உலகம் உள்ளவரை நிலைக்கும் என வரமளித்தவர்.
தன் தவத்தால் மெய்சிலிர்த்து சிவனும் பார்வதியும் காட்சி கொடுத்த பொழுது தன் தவத்தின் கிடைத்த அழகான பாடலை பாடி மெய்சிலிர்க்க வைத்த பாடலுக்கு காயத்ரி மந்திரம் என்று பெயர் சூட்டி இவ்வுலக மக்கள் இறை வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டி முன்மொழிந்தார் சிவபெருமான். பார்வதி அம்மையாரும் காயத்தை திரியாக்கியதால் காயத்ரி மந்திரம் என்றும் மக்கள் அனைவரும் தர்மமாக பெற வழிமொழிந்தார். இவ்வுலகிற்கு கௌசல்யா சுப்ரபாதத்தையும் கொடுத்து ஸ்ரீராமனுக்கு காயத்ரி மந்திர தீட்சையும் "பலே அதிபலே" மந்திர உபதேசமும் வழங்கி குருவாக விளங்கியவர்.
சிவபெருமானால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார், பிரம்ம ரிஷிகெல்லாம் ரிஷி தலைமை ரிஷி என்கிற மாபெரும் பட்டத்தை வசிஷ்டர் வாயால் பெற்றவர். மேலும் இவ்வுலகை காக்க விடிவெள்ளியாக என்றென்றும் ஒளி பெறுவாய் என்ற வரத்தை எம்பெருமான் சிவபெருமானிடம் பெற்றவர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் நடந்த குருபூஜை போட்டோக்கள் மற்றும் விழாவையும் முழுமையாக கண்டுகளிக்க